PulseNews
விளையாட்டு

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது வலியாக இருந்தாலும், அதற்கான நேரம் வந்துவிட்டதாக நம்புவதாக லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்த லயோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த நாட்டு அணியுடனான பல வருட கால புகழ்பெற்ற விளையாட்டுலக பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அர்ஜென்டினாவின் சமீபத்திய உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தோல்விக்கு பிறகு தனது எதிர்காலம் குறித்து தீவிரமாக சிந்தித்ததாகக் கூறி, மெஸ்ஸி ஒரு உணர்ச்சிப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டு தனது ஓய்வு முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு வலியானதாக இருந்தாலும் , விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நம்புவதாக அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி விளக்கமளித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கால்பந்தாட்டம் இருக்கும் வரையில் அவரது பெயர் ஆடுகளங்களில் ஒலிக்கும் என ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச போட்டிகளில் மெஸ்ஸியின் சாதனை..!

6 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று 2014, 2022, 2026 என 3 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். 2022ல் கால்பந்து உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார். 2 முறை உலகக்கோப்பை சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். 6 உலகக் கோப்பைகளில் 34 போட்டிகளில் பங்கேற்று உலகக் கோப்பைகளில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் 13 முறை ஆட்டநாயகன் விருதை வென்று, இந்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அணியை அதிக போட்டிகளில் (19) கேப்டனாக வழிநடத்திய நபர் என்ற பெருமையும் மெஸ்ஸியையே சேரும். ஒரே உலகக் கோப்பையிலேயே க்ரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என அனைத்திலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை 2022ம் ஆண்டு உலகக் கோப்பையில் படைத்தார்.

மெஸ்ஸியின் 20 ஆண்டுகால பயணம்..!

39 வயதான மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளாக அர்ஜெண்டினா அணிக்காக சர்வதேச காலபந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 2005ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் கண்ட அவர் 207 போட்டிகளில் 125 கோல்களை அடித்து அந்த அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக கோபா அமெரிக்கா போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் தோல்விகளை மட்டுமே கண்டு வந்தாலும், 2021 மற்றும் 2024ம் ஆண்டுகளில் அணியை சாம்பியானாக்கினார். தொடர்ந்து 2022ம் ஆண்டு அர்ஜெண்டினா அணியை உலகக் கோப்பை சாம்பியனாக்கியதோடு, 2026ம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கும் வழிநடத்தினார். சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் விருதான பாலண்டியர் விருதை 8 முறை வென்று சரித்திரம் படைத்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற 2022ம் ஆண்டிலேயே ஃபினலிஸ்ஸிமா தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றார்.

கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை..!

மெஸ்ஸியின் அறிக்கையில், “நான் சத்தியமாக கூறுகிறேன், நாங்கள் அனைத்தையும் வென்ற இந்தக் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட நான் எப்போதும் என் முழு உழைப்பையும் கொடுத்தேன். இந்த நாட்டிற்காகவும், கால்பந்தின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரவும், அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்பதில் உங்களைப் பெருமை கொள்ளச் செய்யவும் நான் எப்போதும் போராடி என் முழு உழைப்பையும் கொடுத்தேன்.

இதையும் படியுங்கள்: TN Weather News: 14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை

அர்ஜென்டினாவுடனான தனது காலம் முடிவுக்கு வருவதைப் புரிந்துகொண்டுள்ளேன், புதிய தலைமுறை வீரர்கள் உருவாகி வருவதை ஏற்றுக்கொள்கிறேன். தேசிய அணியில் ஓர் அங்கமாக இருப்பதை நான் நேசித்தேன், இனியும் நேசிப்பேன். என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன், இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இங்கு இருப்பதற்குத் தகுதியான சிறந்த இளம் வீரர்களும் உருவாகி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இனி எனது தாய் நாட்டிற்கு அணிக்கு வெளியிலிருந்து நான் ஆதரவளிப்பேன்” என மெஸ்ஸி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்
PulseNews சுருக்கம்

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். கால்பந்து உலக அரங்கில் பல சாதனைகளைப் படைத்துள்ள மெஸ்ஸி, தற்போது தனது நீண்ட கால பயணத்தை முடித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவது மிகுந்த வேதனையை அளித்தாலும், இதற்கான சரியான நேரம் வந்துவிட்டதாக மெஸ்ஸி கூறியுள்ளார். இதன் மூலம், அர்ஜென்டினா அணிக்காக அவர் ஆடிய புகழ்பெற்ற விளையாட்டுப் பயணம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports