WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா போகுமா? போகாதா?

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்க உலகக்கோப்பை நடத்துவது போல, டெஸ்ட் போட்டிகளுக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2025- 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலகட்டம் தற்போது நடந்து வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியை டிரா மட்டுமே செய்ததால் இந்தியாவின் புள்ளிகள் 16 ஆக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 51.52 சதவீதத்துடன் 5வது இடத்தில் உள்ளது.

இந்திய கேப்டன் சுப்மன்கில் இந்தியா கண்டிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டுமென்றால் அது எப்படி சாத்தியமாகும்? என்பதை கீழே காணலாம்.

இறுதிப்போட்டிக்குச் செல்லுமா?

இந்திய அணி இன்னும் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த 7 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி கட்டாயமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதற்கு எந்த தடையும் இருக்காது. இவ்வாறு நிகழ்ந்தால் 70.37 சதவீதம் புள்ளிகளை இந்தியா எட்டும்.

இந்திய அணி இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும். அப்போது, 64.8 சதவீதம் புள்ளிகளை இந்தியா எட்டும். அப்போது, மற்ற அணியின் வெற்றி வாய்ப்பை பொறுத்தும் இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

இந்திய அணி இதற்கும் குறைவான போட்டிகளில் வெற்றி பெற்றாலோ, டிரா செய்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்.

யாருடன் மோதல்?

இந்திய அணிக்கு இனி வர உள்ள 7 டெஸ்ட் போட்டிகளும் மிகவும் சவால் மிகுந்ததாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 5 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இந்திய அணி ஆட உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி அவர்கள் நாட்டிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

இந்த இரு அணிகளும் மிகவும் வலுவான அணிகள் என்பதால் இந்தியாவின் இறுதிப்போட்டி கனவு என்பதும் மிகவும் எளிதாக இருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்றாலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக அமையும். அப்போது இந்தியா 59.26 சதவீதம் புள்ளிகள் பெறும். அப்போது மற்ற அணிகளின் வெற்றி விகிதத்தைப் பொறுத்து இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு அமையும்.

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 80 சதவீதம் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 75 சதவீதம் புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளது. வங்கதேசம் 55.56 சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு எஞ்சிய 7 போட்டிகளும் இறுதிப்போட்டிக்குச் செல்ல வைக்கும் பரீட்சை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களைப் போலவே, டெஸ்ட் போட்டிகளுக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2025-2027 காலக்கட்டத்திற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்துள்ளதால், தற்போது இந்திய அணியின் புள்ளிகள் 16 ஆக உள்ளது.