அகில இந்திய கூடைப்பந்து போட்டி: கோப்பையை வென்ற ஓ.என்.ஜி.சி, ரயில்வே அணிகள்
கோவையில் அகில இந்திய அளவிலான அகில இந்திய அளவிலான பி.எஸ்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டி, கடந்த 26-ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் சென்னை - இந்தியன் வங்கி அணி, புது டெல்லி - இந்திய விமானப்படை அணி, லோனாவாலா - இந்திய கப்பல்படை அணி, புது டெல்லி - ஓஎன்ஜிசி அணி, திருவனந்தபுரம் - கேரள மாநில மின்வாரியம் அணி, சென்னை - ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணி மற்றும் சென்னை - தமிழ்நாடு இதர அணி (Rest of Tamil Nadu) ஆகிய 7 அணிகளும், பெண்கள் பிரிவில் செக்கந்தராபாத் - தென் மத்திய ரயில்வே அணி, ஹ_ப்ளி - தென் மேற்கு ரயில்வே அணி, சாலக்குடி - சேக்ரெட் இருதய மருத்துவமனை அணி மற்றும் - கோயம்புத்தூர் - கோவை மாவட்ட மகளிர் அணியும் பங்கு பெற்றது. பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் செக்கந்தராபாத் - தென் மத்திய ரயில்வே அணியை எதிர்த்து ஹப்ளி - தென் மேற்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மேற்கு இரயில்வே அணி 65 - 54 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதே போல ஆண்கள் இறுதிப் போட்டியில் சென்னை - ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு அணியை எதிர்த்து புது டெல்லி - ஓஎன்ஜிசி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 71 - 66 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

கோவையில் ஐந்து நாட்கள் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பி.எஸ்.ஜி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கின. இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏழு அணிகளும், பெண்கள் பிரிவில் செக்கந்தராபாத் தென் மத்திய ரயில்வே அணி உட்பட பல்வேறு அணிகளும் பங்கேற்றன.
இந்த கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும், பெண்கள் பிரிவில் ரயில்வே அணியும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடர் போட்டிகள் நிறைவடைந்தன.