"அவர் தான் உண்மையான நாயகன்” - அபிஜித் தீப்கே உருக்கம்
ஜார்கண்ட் மாநிலத்தில், அரசுப்பணி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வரங்களாகத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவும், இதற்காக ஒரு தனிக் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று (10-08-26) மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணி சென்றனர். அப்போது, பேரணி சென்ற மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்தல் உள்ளிட்ட தகாத சம்பவங்களில் ஈடுபட்டனர். அதனால், மாணவர்கள் மற்றும் காவல்துறையினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த பேரணியில், தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் தேவேந்திர மஹ்தோ கலந்துகொண்டார். அவர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதற்குக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேவேந்திர மஹ்தோவை தொடர்பு கொண்டு பேசிய கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, மாணவர்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்தார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர மஹ்தோவுடன் பேசினேன். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு காவல்துறையினரின் தடியடிக்கு ஆளானதாகவும், காயமடைந்ததாகவும் அவர் என்னிடம் கூறினார். அவருக்கு நெஞ்சு வலியும் உள்ளது," என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, மஹ்தோவுடனான தனது காணொளி அழைப்பின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துகொண்டார். காவல்துறையின் இந்த வன்முறை நடவடிக்கையைக் கண்டித்த அவர், "ஜந்தர் மந்தர் அல்லது ஜார்க்கண்ட் என எங்கு நடந்தாலும், மாணவர்களுக்கு எதிரான இத்தகைய காவல்துறை அத்துமீறல் கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது. தேவேந்திர நாத் மஹ்தோவுடனும் அவரது போராட்டத்துடனும் சிஜேபி உறுதியாகத் துணை நிற்கும்” என்று தெரிவித்தார். மேலும், அவர் மாஹ்தோவை ஒரு "உண்மையான நாயகன்" என்று அழைத்ததுடன், அவரது துணிச்சலையும் வலிமையையும் அந்த இயக்கம் போற்றுவதாகக் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப்பணி தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதற்காக ஒரு தனிக்குழுவை அமைக்கவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு, அபிஜித் தீப்கே அவர்கள் மாணவர்களின் போராட்ட உணர்வைப் பாராட்டி உருக்கமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.