“முதலமைச்சரைப் பார்க்கனும் என்பது கோரிக்கையா?”; தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் வழக்கறிஞர் கேள்வி: வைரல் வீடியோ
சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகாரிகளின் மீதான நம்பிக்கையின்மையைக் குறிப்பிட்டு, "நாங்கள் ஓட்டு போட்டது 'நம்ம விஜி' முதலமைச்சர் விஜய்க்குத்தான்; அவரை நேரில் சந்தித்துத் தான் கோரிக்கைகளைத் தெரிவிப்போம்" என வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன் பேசிய ஆவேசமான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 12 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையா என்று கேட்கலாம். ஆமாம். முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதையும் கோரிக்கையாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கு காரணம் நாம் இல்லை” என ஆவேசமாகப் பேசினார். வீடியோவைப் பாருங்கள்: மேலும், அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாததால் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புவதாக தூய்மை பணியாளர்கள் கூறுவதாக தெரிவித்தார். “இந்த அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு சட்டம் தெரியவில்லை, அரசியலமைப்பு தெரியவில்லை. அதனால் நாங்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேச விரும்புகிறோம்” என்றார். தொடர்ந்து, “நாங்கள் ஓட்டு போட்டது சென்னை மாநகராட்சி ஆணையருக்கோ, அதிகாரிகளுக்கோ அல்ல. நம்ம புள்ளை, நம்ம அண்ணன், நம்ம விஜி, நம்ம விஜய் என்று ஓட்டு போட்டோம். முதலமைச்சர் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டோம். அதனால் அவரை நேரில் பார்த்து எங்களுடைய கோரிக்கைகளை சொல்ல விரும்புகிறோம்” எனக் கூறினார். தூய்மை பணியாளர்களிடம் முதலமைச்சர் விஜய் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்திய அவர், ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “5 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு என்ன செய்வோம்? நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார். மேலும், தூய்மை பணியாளர்களின் அடுத்த தலைமுறையும் இதே தொழிலுக்கு வர வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறினார். “இந்த தலைமுறை தலையெழுத்து வந்து துடைப்பத்தை பிடித்து, கழிவுகளை அள்ளி எல்லா வேலைகளையும் செய்துவிட்டோம். இனிமேல் என் பிள்ளையோ, என் பெண்ணோ இந்த தொழிலுக்கு வரக்கூடாது. எங்கள் வம்சத்தில் இனிமேல் யாரும் இந்த தொழிலுக்கு வரக்கூடாது” என அவர் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அதே நேரத்தில், அரசு பணம் இல்லை எனக் கூறுவதாகவும், ஆனால் ஒப்பந்தப் பணிகளுக்கு பெருமளவில் பணம் செலவிடப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். “அரசிடம் பணம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஒப்பந்தம் கொடுப்பதற்கு பணம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடி இருக்கிறது. உண்மையிலேயே எங்களை நிரந்தரம் செய்தால் அவ்வளவு செலவு ஆகுமா?” என கேள்வி எழுப்பினார். தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு, அவர்களை சந்தித்து பேசி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கை என வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன் தெரிவித்துள்ளார். அவரது இந்த நகைச்சுவையான அரசைக் கேள்வி கேட்கும் பேச்சு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ள வழக்கறிஞர் புளியந்தோப்பு மோகன், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தே தங்களது கோரிக்கைகளை முன்வைப்போம் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தாங்கள் முதலமைச்சருக்காகவே வாக்களித்ததாகக் கூறி அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. போராட்டக்களத்தில் அவர் ஆற்றிய இந்த உரை பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.