PulseNews
அரசியல்

நீக்கப்பட்ட பகுதிகள் வைத்து ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை; சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சரிக்கை

சட்டப்பேரவையில் பேசப்பட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கந்த 1967-ம் ஆண்டு முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், தி.மு.க. மற்றும் அ.தி.முக. என இரு திராவிட கட்சிகள் தான் ஆட்சியில் அமர்ந்திருந்தது. இந்த 49 ஆண்டு கால வரலாற்றை உடைக்கும் வகையில், கடந்த 2026 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல், 35 சதவீத வாக்குகள் பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க தனி பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் இந்த அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.. இதனிடையே தமிழக அரசியல் வரலாற்றில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக முழுமையாக ஒளிபரப்பு செய்து த.வெ.க அரசாங்கம் சாதனை படைத்துள்ளது, இந்த ஆட்சி அமைத்து முதல் நாளில் இருந்தே சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் பாமர மக்கள் கூட சட்டசபையில் என்ன நடக்கிறது? தொகுதிக்காக எம்.எல்.ஏக்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் தி.மு.க. சார்பில் சட்டசபை நேரலை ஒளிபரப்பு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் எடுத்து கூறப்பட்டுள்ளது, நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் (சபாநாயகர்) இரு தரப்புக்கும் பொதுவாக அவை நடத்தி வருகிறீர்கள். அதனால் உங்களை மனதார பாராட்டுகிறோம். அதே சமயம் நீங்கள் சர்ச்சைக்குறிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் இது நேரலை என்பதால், நீங்கள் நீக்கினாலும் அந்த வார்த்தைகள் ரீல்ஸாக மாறி இணையத்தில் வைரலாகி வருகிறது என்று பேசினார். இதை கேட்ட சபாநாயகர், சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் வெளியில் வந்தது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் ரீல்ஸாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்து எந்த வகையில் பயன்படுத்தினாலும் அது அவையின் மாண்பை கெடுப்பதாக இருக்கும். விதிகளை மீறுவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்று எச்சரிக்த்துள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நீக்கப்பட்ட பகுதிகள் வைத்து ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை; சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சரிக்கை
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவை விவாதத்தின் போது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் (Reels) வீடியோக்களாக வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் 1967 முதல் 2021 வரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே ஆட்சியில் இருந்த நிலையில், 49 ஆண்டுகால வரலாற்றை மாற்றும் வகையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு கட்சி எந்த கூட்டணியும் இன்றி 35 சதவீத வாக்குகள் பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics