“தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி-க்கள் வேண்டும்”.. தொகுதி மறுவரையறை குறித்து சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!
Premalatha Assembly Speech: தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்த தீர்மானங்கள் மீது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத்தில் உரையாற்றினார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் எம்பி எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயர வேண்டும் என்றும், எம்பிக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலை வரக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான தீர்மானங்கள் குறித்து சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.
அப்போது, தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 39-ல் இருந்து 59 ஆக உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எம்பிக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சூழல் எக்காரணம் கொண்டும் ஏற்படக்கூடாது என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.