PulseNews
அரசியல்

தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் அதிரடி மாற்றங்கள் : வெளியான பரபரப்பு தகவல்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நேற்று (22.08.2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் வெளியாகியிருந்தன. அதில் தமிழகத்தில் உள்ள திமுக மாவட்டங்கள் 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது அதாவது திமுகவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற விதத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 10 மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திருவொற்றியூர், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், பெரம்பூர், ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், மாதவரம், கொளத்தூர் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், துறைமுகம், திருவிக நகர் தனித்தொகுதி ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளன. எழும்பூர் தனித்தொகுதி, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி ஒரு மாவட்டமாகவும், அம்பத்தூர், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளது. அதே போன்றுதி.நகர், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், சைதாப்பேட்டை, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அண்ணாநகர் தொகுதி, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி இடம்பெறக்கூடிய மாவட்டத்திலோ ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி இடம்பெறக்கூடிய மாவட்டத்திலேயோ மூன்றாவது தொகுதியாக இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக திமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மொத்தம் 10 மாவட்டங்களாக சென்னையில் திமுக மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளன. மேலும், திமுக செயற்குழுவில் மூன்று முறை மாவட்டச் செயலாளராக இருந்தவர்களும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் மாவட்டச் செயலாளர் பதவி வகிக்க முடியாது என்ற முடிவு நேற்று எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில், திமுகவில் மூன்று முறை மாவட்டச் செயலாளராக இருந்த நான்கு பேர் மாவட்டப் பதவியை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களான எ.வ. வேலு, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சுந்தர், ஆவுடையப்பன் உள்ளிட்ட 13 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் அதிரடி மாற்றங்கள் : வெளியான பரபரப்பு தகவல்!
PulseNews சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி அமைப்பில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் உள்ள திமுக மாவட்டங்களை 110-ஆகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகள் 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்படவுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics