TVK: மதுவிலக்கு துறைக்காக விஜய்யின் தவெக அரசின் அதிரடி 6 அறிவிப்புகள் - என்னென்ன?

தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று மதுவிலக்கு துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.

அறிவிப்புகள்:

இன்றைய மானியக்கோரிக்கையின்போது மதுவிலக்கு துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். அப்போது, அவர் அறிவித்துள்ளதாவது,

1. கள்ளச்சாராயம் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தியவர்களுக்கான மறுவாழ்வு நிதி ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1 லட்சமாக உயர்வு. மொத்தம் ரூபாய் 10 கோடி நிதி வழங்கப்படும்.

2. அமலாக்கப் பிரிவிற்கு நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள்; ரூபாய் 2.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. இ கலால் மின்னணு மயமாக்கல்; உரிமம் ரத்து, ஒப்படைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள இ கலால் தளத்தின் புதிய தொகுதிகள் உருவாக்கப்படும். இதற்காக ரூபாய் 1.69 கோடி ஒதுக்கப்படும்.

4. கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள், போதைப் பொருட்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடியாக நிதி உயர்த்தி வழங்கப்படும்.

5. சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து ரூபாய் 2 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

6. மெத்தனால் சட்டவிரோத பயன்பாடு மற்றும் திசை திருப்பலைத் தடுக்க புதிய மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும்.

இந்த அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார்.

வாக்குவாதம்:

இன்று சட்டசபைக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு துறை மீதான மானியக்கோரிக்கை என்பதால் மிகவும் பரபரப்பான வாக்குவாதம் திமுக மற்றும் தவெக இடையே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துறை மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளை கீழே காணலாம்.

40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு யுடிஐடி அட்டை மூலம் அனைத்து வகை சாதாரண பேருந்துகளிலும் கட்டணமில்லா பயண வசதி விரிவுபடுத்தப்படும்.

செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ஐஎஸ்எல் மற்றும் மெய்நிகர் கற்றல் முறையில் கற்பிக்கும் திட்டம் ரூபாய் 64 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

பார்வை மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பாடத்திட்டங்களை வாசிக்கும் உதவியாளர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

படிப்பு மற்றும் வேலைக்காக பயணம் செய்யும் உயரம் குறைந்த முதற்கட்டமாக 400 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 4 கோடியில் சிறப்பு ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் வழங்கப்படும்.

அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக 10 இல்லங்கள் ரூபாய் 182 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுவிலக்கு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் அத்துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்படி, கள்ளச்சாராயம் மற்றும் கள்ள மது விற்பனை செய்து சிறை சென்றவர்கள், தண்டனை முடிந்து நல்வழிக்கு திரும்பிய பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.