அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை மிரட்டல்! ஈரான் அதிரடியாக வெளியிட்ட தகவல்
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதன் பின்னணியில் அராக்சியின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. புதிய முயற்சியும் தோல்வி ...

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல் அந்நாட்டின் விரக்தியையே காட்டுகிறது என்று கூறியுள்ள அராக்சி, இத்தகைய முயற்சிகளால் ஈரானை வீழ்த்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். புதிய பொருளாதாரத் தடை முயற்சி தோல்வியில் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.