அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஹோர்மோஸில் புதிய நிபந்தனையை விதித்தது ஈரான்
ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார். ஒரு பொருளாதார பேரழிவு நாளில் அமெரிக்கா அந்நாட்டுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்கும் என்றும், ஈரானுடன் நிதி ரீதியாக கூட்டு சேரும் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். முந்தைய அச்சுறுத்தல்கள் தொடர...

அமெரிக்காவின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அந்த நாட்டுடன் போர் சூழல் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
ஈரான் உடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் முறித்துக்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுடன் நிதி ரீதியாக எந்தவொரு நாடும் கூட்டு சேர்ந்தால், அந்த நாடுகள் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.