போலீசார் யாரேனும் லஞ்சம் கேட்டால் அரியலூர் ஊழல் ஒழிப்பு தனி பிரிவிற்கு தகவல் தெரிவிக்கலாம்: மாவட்ட காவல்துறை அறிவிப்பு
ஜெயங்கொண்டம், ஆக. 20: அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் பொதுமக்களுக்கு காவல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் தங்களது பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் அல்லது சட்டவிரோதமாக பணம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள் தயக்கமின்றி அரியலூர் மாவட்ட காவல்துறையின் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவிற்கு தகவல் தெரிவிக்கலாம்....
அரியலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் யாரேனும் பொதுமக்களிடம் லஞ்சம் அல்லது சட்டவிரோதமாக பணம் கேட்டால், அது குறித்து உடனடியாக புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இத்தகைய முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி அரியலூர் மாவட்ட காவல்துறையின் ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.