பாகிஸ்தான் சுதந்திர தினத்தில் இந்தியப் பாடல்; நடிகைகளின் செயலால் சர்ச்சை
பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது, சில நடிகைகள் தங்களது தேசியக் கொடியைக் கையில் பிடித்துக்கொண்டு பாடல் பாடிய வீடியோ ஒன்று வெளியாகி வைராலாகி வருகிறது. நடிகைகள் பாடிய அந்த பாடல், இந்திய பாலிவுட் சினிமாவில் உளவாளி திரைப்படமான ' ராஸி' என்கிற படத்தில் இடம் பெற்றதாகும். அதாவது, இந்திய தேசபக்திப் பாடலான "ஏ வதன் மேரே வதன்" எனும் இந்த பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த பாகிஸ்தானிய நடிகைகள் தங்களது தேசியக் கொடிகளை அசைத்தவாறே பாடல் பாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் ஒருவர், ”இந்த பாடல் இடம் பெற்ற இந்தியத் திரைப்படம் பாகிஸ்தானுக்கு எதிரானது. மூத்த நடிகைகளான உங்களுக்கு இதுகூட தெரியாதா? சுதந்திர தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் கலாச்சார உணர்வுடன் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகைகளின் இத்தகைய செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் நடிகைகளுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானின் சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்நாட்டு நடிகைகள் சிலர், பாகிஸ்தான் தேசியக் கொடிகளை ஏந்தியபடி பாடல் ஒன்றைப் பாடுகின்றனர்.
இந்த வீடியோவில் பின்னணியாக ஒலிக்கப்படும் பாடல், இந்தியத் திரைப்படமான 'ராஸி' படத்தில் இடம்பெற்ற "ஏ வதன் மேரே வதன்" என்ற நாட்டுப்பற்று பாடலாகும். பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியப் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.