22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!
இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு...

இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இடம்பெறவுள்ளது. கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.