வாக்காளர்களை விமர்சித்து முன்னாள் அமைச்சர் காந்தி கருத்து: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில், தனது சொந்த நிதியான ஆறு லட்சம் ரூபாய் செலவில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்தப் பணிக…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில், தனது சொந்த நிதியான ஆறு லட்சம் ரூபாய் செலவில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காந்தி, தற்போதைய அரசின் நிர்வாகச் செயல்பாடுகள், சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் வாக்காளர்களைக் கடுமையாகச் சாடி, முப்பது சதவீத மக்கள் முட்டாள்களா என்று கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.