அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் துரோகிகளுக…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அவர் இந்த கூட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சம்பவம், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் மோதல்கள் நிலவி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.