2029-ல் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்: புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் உறுதி
புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.பி வைத்திலிங்கம், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று உறுத…

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்.பி வைத்திலிங்கம், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று உறுதியாக அறிவித்துள்ளார்.
இதே சந்திப்பில், நடிகர் விஜய்யைத் தனது சிஷ்யன் என்றும், அவரை உருவாக்கியதே தாங்கள்தான் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறி வருவதைக் கடுமையாக விமர்சித்த வைத்திலிங்கம், இதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மேலும், புதுச்சேரி அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மாநில அந்தஸ்து மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகள் இல்லாததைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், தேர்தலுக்கான கால அட்டவணை மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த தெளிவான விளக்கத்தை மக்கள் அறியும் வகையில் அரசு முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.