கிருஷ்ண ஜெயந்தி: மக்கள் வாழ்வாங்கு வாழ முதலமைச்சர் விஜய் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு…

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது வாழ்த்துகளை அவர் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளைப் பின்பற்றி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அன்பும் அறமும் தழைத்தோங்கும் ஒரு நல்லுலகைப் படைப்பதற்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்வும் போதனைகளும் தர்மத்தின் வழியில் பயணிக்கவும், கடமைகளைச் சரியாக ஆற்றவும், அநீதிக்கு எதிராக அறத்துடன் நிற்கவும் வழிகாட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்பு, நேர்மை மற்றும் மனிதநேயம் போன்ற உயரிய நெறிகளைத் தங்களின் வாழ்வியல் முறையாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.