நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செல்போன் மற்றும் கேமராக்களுக்கு தடை: பாதுகாப்பு பெட்டகங்கள் அமைப்பு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்களை எடுத்துச் செல்ல கோயில் நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கோயிலின் புனிதத்தன்…

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குள் செல்போன்கள் மற்றும் கேமராக்களை எடுத்துச் செல்ல கோயில் நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையைத் தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கும் பிரத்யேக பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மொத்தம் 120 பாதுகாப்பு பெட்டகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் செல்போன்களை இந்த பாதுகாப்பு பெட்டகங்களில் ஒப்படைத்துவிட்டு வழிபாட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.