மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சி தற்போது காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.