PulseNews
அரசியல்

‘கடவுள் கொடுத்த மழையை தேக்கி வைக்க முடியாது’ - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவிரி நீரை திறந்துவிட முடியாது எனவும் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை கர்நாடகா அரசு கண்டுகொள்ளாமல் தற்போது வரை தண்ணீர் திறந்துவிடாமல் உள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி வழங்கப்பட்டுள்ள மாதாந்திர நீர் பங்கீட்டு அட்டவணையின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை முழுமையாக வழங்க வேண்டும். குறைந்த அளவு நீரை மட்டும் வழங்குவது ஏற்புடையதல்ல. ஆகஸ்ட் மாத இறுதி வரையில் சுமார் 30 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் 14,000 கன அடி வீதம் நீர் திறப்பது போதுமானதாக இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று (17-08-26) உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா அரசு வாதிட்டது. அதற்கு நீதிபதிகள், “கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள்” என்று குறிப்பிட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டனர்.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘கடவுள் கொடுத்த மழையை தேக்கி வைக்க முடியாது’ - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்!
PulseNews சுருக்கம்

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரைத் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தாத நிலையில், கடவுள் கொடுத்த மழையை சேமித்து வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics