PulseNews
அரசியல்

டெல்லியில் கட்சி கூட்டம்; சண்டிகர் சென்ற காங்கிரஸ் எம்.பி

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரண்ஜித் சிங் சன்னி, டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழுவின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல முக்கியத் தலைவர்கள், அத்துடன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நான்கு முதல்வர்கள் உள்ளிட்டோர் இந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், வினாத்தாள் கசிவு மற்றும் ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்காத சன்னி, தேர்வு எழுதச் சென்றுள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பலகலைக்கழகத்தில் முதுகலை படிப்பைத் தொடர்ந்து வரும் அவர், அன்றைய தினத்தில் தேர்வு இருந்த காரணத்தால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பற்றி சன்னியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்று கட்சியின் மேலிடத்திடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியிருந்தேன். அதற்குக் கட்சி மேலிடமும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. நான் தேர்வை எழுதத் தவறியிருந்தால், எனது பட்டம் ஓராண்டு தாமதமாகியிருக்கும். அதன் காரணமாக, நான் மேற்கொள்ள விரும்பும் ஆராய்ச்சிப் பணிகளும் தாமதப்பட்டிருக்கும்" என்று தெரிவித்தார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்லியில் கட்சி கூட்டம்; சண்டிகர் சென்ற காங்கிரஸ் எம்.பி
PulseNews சுருக்கம்

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பங்கேற்கவில்லை. அவர் சண்டிகர் சென்றது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நான்கு முதல்வர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சன்னி பங்கேற்காதது கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics