PulseNews
அரசியல்

2029 தேர்தலில் உருவாகிறது திமுக - CJP கூட்டணி ? தமிழக அரசியலில் பரபரப்பு! ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் ஸ்டாலின்!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இடையே கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து CJP நாடு முழுவதும் மாணவர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்ததாகவும், அதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அக்கட்சி கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் போராட்டங்களுக்கு திமுக தலைமை தொடக்கம் முதலே ஆதரவு அளித்து வந்ததாகவும், இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக - CJP கூட்டணி அமைந்தால், அது திமுகவுக்கு இளைஞர் மற்றும் மாணவர் வாக்குகளை ஈர்ப்பதில் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக விஜய் தலைமையிலான தவெக இளைஞர்களை மையப்படுத்தி அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக CJP-யை முன்னிறுத்தும் முயற்சியாகவும் இந்த கூட்டணி பார்க்கப்படுகிறது. தேசிய அளவிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் அணியை உருவாக்க CJP முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் ஏற்கனவே தவெகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், திமுக - CJP கூட்டணி உருவானால் தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக - காங்கிரஸ் கூட்டணி, திமுக - CJP கூட்டணி என கள அமைப்பு உருவானால், இளைஞர் மற்றும் புதிய தலைமுறை வாக்குகள் எந்த அணிக்கு செல்லும் என்பது தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், 2029 தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால், திமுக - CJP கூட்டணி உறுதியானது என்ற தகவலை தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருத முடியாது. கூட்டணி தொடர்பான அரசியல் நகர்வுகள் வரும் காலங்களில் மேலும் தெளிவாகும்.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
2029 தேர்தலில் உருவாகிறது திமுக - CJP கூட்டணி ? தமிழக அரசியலில் பரபரப்பு! ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் ஸ்டாலின்!
PulseNews சுருக்கம்

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போதே விறுவிறுப்படைந்துள்ளது. திமுக மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இடையே புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் CJP கட்சி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இரு கட்சிகளும் கைகோர்க்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics