தி.மு.க-வில் பதவி இழக்கும் 13 மாவட்டச் செயலாளர்கள் யார், யார்? அதிரடியாக நிர்வாகிகளுக்கு வயது கட்டுப்பாடு
திராவிட முன்னேற்றக் கழகத்தில் கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், புதிய மாற்றங்களை முன்னெடுக்கவும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சியின் மாவட்டக் கழகப் பிரிவுகளை மறுசீரமைப்பு செய்து, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 110-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன. மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் மாநகரச் செயலாளர் பதவிகளின் தேவை இனி இருக்காது எனக் கருதப்படுகிறது. அத்துடன், கட்சியின் உட்கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பும், பதவிக் கால வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை உள்ள பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக உயர்த்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய வயது வரம்பு விதியின் காரணமாக, 70 வயதைக் கடந்த 13 மூத்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் காஞ்சிபுரம் தெற்கைச் சேர்ந்த சுந்தர் (72), ராணிப்பேட்டையின் ஆர்.காந்தி (80), திருவண்ணாமலை தெற்கின் எ.வ.வேலு (75), விழுப்புரம் வடக்கின் செஞ்சி மஸ்தான் (71), சேலம் கிழக்கின் எஸ்.ஆர்.சிவலிங்கம் (75) ஆகியோர் அடங்குவர். மேலும், ஈரோடு தெற்கின் முத்துசாமி (77), தஞ்சாவூர் வடக்கின் சாக்கோட்டை அன்பழகன் (72), புதுக்கோட்டை தெற்கின் ரகுபதி (76), மதுரை மாநகரைச் சேர்ந்த கோ.தளபதி (70), தேனி தெற்கின் ராமகிருஷ்ணன் (77), விருதுநகரின் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (77), தூத்துக்குடி தெற்கின் அனிதா ராதாகிருஷ்ணன் (74) மற்றும் திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த ஆவுடையப்பன் (81) ஆகிய 13 தலைவர்கள் இந்தப் புதிய விதிகளின் கீழ் தங்களது பதவி இழக்கும் வாய்ப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் ஆவர். யார் அந்த 13 பேர்? காஞ்சிபுரம் தெற்கு - சுந்தர் - 72 ராணிப்பேட்டை - ஆர். காந்தி - 80 திருவண்ணாமலை தெற்கு - எ.வ. வேலு - 75 விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான் - 71 சேலம் கிழக்கு - எஸ்.ஆர். சிவலிங்கம் - 75 ஈரோடு தெற்கு - முத்துசாமி - 77 தஞ்சாவூர் வடக்கு - சாக்கோட்டை அன்பழகன் - 72 புதுக்கோட்டை தெற்கு - ரகுபதி - 76 மதுரை மாநகர் - கோ. தளபதி - 70 தேனி தெற்கு - ராமகிருஷ்ணன் - 77 விருதுநகர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - 77 தூத்துக்குடி தெற்கு - அனிதா ராதாகிருஷ்ணன் - 74 திருநெல்வேலி மேற்கு - ஆவுடையப்பன் - 81 கட்சியில் புதிய தலைமுறைக்கும் இளம் நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

திமுகவின் கட்சி நிர்வாகத்தைப் பலப்படுத்தும் நோக்கில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களை 110-ஆக உயர்த்தி மறுசீரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய பிரிவுகள் உருவாக்கப்படவுள்ள நிலையில், நிர்வாகிகளுக்கு வயது கட்டுப்பாடு விதிப்பது மற்றும் 13 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து விடுவிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.