அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..

அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்

தமிழக சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறநிலையத்துறை மானிய கோரிக்கை தொடர்பான அறிவிப்பின் போது திருச்சி மாவட்டம், திருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அன்பில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அந்த வகையில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அம்மன் கோயிலில் தங்கும் வகையில் மண்டபம் அமைக்கப்படுவதாக விமர்சிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு நோய் பரவாதா.?

இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், இந்து சமய அறநிலைத்துறையில் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்த பிறகு, நள்ளிரவு 12 மணியிலிருந்து திட்டமிட்டு பல்வேறு பொய் பிரச்சாரங்களை திமுகவினர் வருகின்றனர். மாரியம்மன் கோவிலில் அம்மை பாதிக்கப்பட்டவர்களை தங்குவது மற்றவர்களுக்கு நோய் பரவாதா எனவும் திமுக ஐடி சமூக வலைதளங்களில் பொய்களை பரப்பிவருகின்றனர். அந்தத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை முழுமையாக தெரியாமல் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என கூறியிருந்தார்.

உண்மை என்ன.?

இந்த நிலையில்,அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரப்பப்படும் தகவல் தொடர்பாக தமிழக அரசின் FACT CHECK குழு விளக்கம் அளித்துள்ளது.

பரவும் செய்தி

அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல், அவர்களுக்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கத்தில், "அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்து குணமானவர்கள் தங்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், அன்பில் பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்குவதற்காக ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மண்டபம் கட்டப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு குறித்து பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் மற்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.