PulseNews
அரசியல்

விநாயகர் சதுர்த்தி சிலை அமைப்பாளர்கள் கவனத்திற்கு! அனுமதி கிடைக்கலனா இதுதான் காரணம்.. ஆட்சியர் அதிரடி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவினைச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையிலும் கொண்டாடுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் சிலை அமைப்பாளர்களுடன் இக்கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிலை நிறுவுவதற்கான நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விநாயகர் சிலைகளை நிறுவ விரும்பும் அமைப்பாளர்கள் நில உரிமையாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். இச்சான்றுகளைச் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அல்லது துணை காவல் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து உரிய அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மட்டுமே உள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணங்கள் மற்றும் இரசாயனங்கள் இல்லாத சிலைகளையே பயன்படுத்த வேண்டும். மேடையுடன் சேர்த்து சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். வழிபாட்டுப் பந்தல்கள் தீப்பற்றாதவாறு அமைக்கப்பட வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் வழிமுறைகள்

அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். சிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். போதிய மின்வசதி செய்வதுடன், அரசியல் கட்சிகள் அல்லது வகுப்புவாத தலைவர்களுக்கு ஆதரவாகப் பேனர்கள் வைக்கக் கூடாது. பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்காத வகையில் பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யும் இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களால் விபத்துகள் ஏற்படாதவாறு உயரத்தைக் கண்காணிக்கக் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எஞ்சியப் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகள் அகற்ற வேண்டும். கரைப்பதற்கு முன்னரும் பின்னரும் நீரின் தரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்யும்.

துறை சார்ந்த அலுவலர்களுக்கான உத்தரவுகள்

விண்ணப்பங்களை ஆய்வு செய்ய தனி பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் முன்கூட்டியே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஊர்வலப் பாதைகள், மாற்றுப் பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களை முன்கூட்டியே இறுதி செய்ய வேண்டும். சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதைக் கண்காணித்து, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சிலை அமைப்பாளர்களின் கோரிக்கைகளும் ஆட்சியரின் பதிலும்

கூட்டத்தில் பங்கேற்ற சிலை அமைப்பாளர்கள், விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடைசி நாள் வரை காத்திருக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், ஊர்வல நாட்களில் போக்குவரத்து மாற்றங்களைச் சிறப்பாகச் செய்யவும், மாமல்லபுரம் கடற்கரையில் 11 சிலைகளைக் கரைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவும் கோரிக்கை விடுத்தனர்.

விண்ணப்பங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்கப்படும் என்றும், ஏனைய கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்த ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற சிலை அமைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விநாயகர் சதுர்த்தி சிலை அமைப்பாளர்கள் கவனத்திற்கு! அனுமதி கிடைக்கலனா இதுதான் காரணம்.. ஆட்சியர் அதிரடி!
PulseNews சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினைச் சிறப்பாகவும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலும் கொண்டாடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் சிலை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதித்தனர்.

விழாக் காலங்களில் சிலைகளை நிறுவுவதற்கு உரிய அனுமதியைப் பெறுவது மற்றும் விதிகளைப் பின்பற்றுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முறையான அனுமதி கிடைக்கப்பெறாததற்கான காரணங்கள் மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்தும் சிலை அமைப்பாளர்களிடம் ஆட்சியர் விளக்கமளித்தார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics