டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்
தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 31.08.2026 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் விசாரணைகளைத் தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-889-2015 மற்றும் அதிகாரப்பூர்வ WhatsApp எண் +91-7397720230 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம். கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் (24 × 7) பொதுமக்கள்/நுகர்வோர்களிடமிருந்து புகார்கள் மற்றும் தொடர்புகளைப் பெறும். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளை பின்வரும் இணைப்புகள் மூலம் அணுகலாம்: Facebook: TASMAC Official X(pererer Twitter): @Tasmac Official Instagram: @tasmac_official YouTube: TASMAC Official மேற்கண்ட கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை, WhatsApp மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலம் பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் எளிதாகத் தெரிவிக்க இயலும். அவ்வாறு பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காணும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்." என்று அவர் கூறியிருக்கிறார்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் மற்றும் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நுகர்வோர் தங்கள் குறைகளையும் புகார்களையும் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 31, 2026 முதல் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் செயல்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.