ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா
கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்கா ஏரி எனக் குறிப்பிடப்பட்ட வரைபடத்திற்கு அருகே அமர்ந்து பேசிய ட்ரம்ப், கனடாவுடன் கையாள்வது கடினமாக இருப்பதாகவும், அந்நாடு அமெரிக்காவைச் சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நாட்கள் நடந்த தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த...

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" என மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இதற்கான வரைபடத்துடன் அவர் தனது முடிவை அறிவித்தார்.
கனடாவுடனான உறவு கடினமாக உள்ளதாகவும், அந்நாடு அமெரிக்காவைச் சுரண்டுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நாட்களாக நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த சூழலில், இந்த அதிரடி நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்கு கனடா தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.