PulseNews
அரசியல்

”அதையும் சாதித்தவர் திருமா” - ரஜினிகாந்த் மனமார்ந்த வாழ்த்து

இன்று (17-08-26) பிறந்த நாள் கொண்டாடும் ’விடுதலை சிறுத்தைகள் கட்சி’யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ”தனது 28 வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகளாகக் கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி, தன்னுடைய கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், ஒரு தொண்டரையும் இழக்காமல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கையில் தொடர்ந்து போராடி அதையும் சாதித்தவர் தொல்.திருமாவளவன். அவர் தனது 65 வது வயதில் நுழையும் இந்த தருணத்தில், அவர் பெரும் பேறும் புகழும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
”அதையும் சாதித்தவர் திருமா” - ரஜினிகாந்த் மனமார்ந்த வாழ்த்து
PulseNews சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (17-08-26) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் திருமாவளவனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். தனது 28 வயதில் கட்சியைத் தொடங்கி, 36 ஆண்டுகளாக அதனைச் சிறப்பாக வழிநடத்தி வருவதையும், தனது கொள்கை மற்றும் சித்தாந்தங்களில் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியும் ரஜினிகாந்த் அவரைப் பாராட்டியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics