“மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்” - உறுதிமொழி எடுத்த முதல்வர்!
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) என்ற மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று (11.08.2026) நடைபெற்றது. சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்புக்கான கூட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சிறந்து விளங்கியவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும், மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொள்ளச் செய்தார். அப்போது அவர், “குட் மார்னிங். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். எல்லாரும் கொஞ்சம் கையை இப்படி (நீட்டி) வைக்க முடியுமா? தேங்க்யூ” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அந்த உறுதிமொழியில், “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், போதைப்பொருட்களைத் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்” எனத் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இன்று 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' எனும் மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டைத் தமிழகத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.