'வந்தே மாதரம்' நிலைப்பாடு; பா.ஜ.க.வுக்கு பலம் சேர்ப்பது போல் செய்திருக்க கூடாது: காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி
எழுதியவர்: மனோஜ் சிஜி காங்கிரஸ் செயற்குழு (CWC) கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்று நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கட்சித் தலைமை இன்னும் நுணுக்கமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று கட்சியின் சில பிரிவினரிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: பிரபல வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு தலைவருமான அபிஷேக் மனு சிங்வி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை” அடிப்படையாகக் கொண்டு தனது சட்டக் கருத்தை கட்சித் தலைமைக்கு வழங்கியதாகவும், பொது நிகழ்ச்சிகளுக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், கடந்த வாரம் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டிருந்தது. ஜார்க்கண்டில், காங்கிரஸ் கட்சி ஜேஎம்எம் தலைமையிலான அரசில் கூட்டணிக் கட்சியாக உள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு தேசியப் பாடலான வந்தே மாதரத்தைப் பாடும் நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்த்தது. இது ஒரு சாதாரண விவகாரம். கட்சி இதை பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால், தேவையில்லாமல் இதில் தலையிட்டுவிட்டது” என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மற்றொரு உறுப்பினர் கூறுகையில், “இப்போது நாட்டில் மிக முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. மாணவர்களின் எதிர்பார்ப்புகள், அயோத்தி ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உள்ளன. அரசு தற்போது பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் பாஜகவின் பலத்தை அதிகரிக்கும் வகையில் நாம் செயல்பட்டிருக்கக் கூடாது” என்றார். மற்றொரு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் கூறுகையில், தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா, 2026 நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, அவை அமளியில் இருந்ததால் காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். ஜூலை 30ஆம் தேதி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவை இந்த மசோதாவை சுமார் 15 நிமிடங்களில் நிறைவேற்றியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற ஒரே எதிர்க்கட்சியாக திமுக இருந்தது. நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. அப்போது அவையில் கடும் அமளி நிலவியதால், கூச்சல் மற்றும் குழப்பத்துக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் அந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதும் உண்மைதான். இதற்கு முன்பு தொகுதி மறுவரையறை அல்லது எஃப்சிஆர்ஏ (FCRA) திருத்த மசோதா போன்ற விவகாரங்களில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், இப்போது வந்தே மாதரம் குறித்து இவ்வாறு கூறுகிறோம்” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், 1937ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சி.டபிள்யூ.சி (CWC) தீர்மானத்தை மேற்கோள் காட்டி, மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவர்கள், வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. இந்த முடிவை ஆதரித்து, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் கன்னையா குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், “நாங்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. இல்லையெனில், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கும். சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பாரம்பரியம் நம்முடையது” என்றார். இதனிடையே பொது நிகழ்ச்சிகளுக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகக் கூறிய என்று மாநிலங்களவை எம்.பியான சிங்வி திருத்தப்பட்ட சட்டத்தில் வந்தே மாதரம் பாடலை ஒரு “குறிப்பிட்ட முறையில்” பாடுவது தொடர்பாக எந்தத் தெளிவான கட்டுப்பாடும் இல்லை. தேசிய அளவிலான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் குறித்து மட்டுமே சட்டம் குறிப்பிடுகிறது. உங்கள் வீடு, ஹோட்டல் அல்லது கல்வி நிறுவனத்தில் நடைபெறும் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், தேசியப் பாடலைப் பாடுவதைத் தடுப்பது, பாடுவதைத் தடுக்க முயற்சிப்பது அல்லது பாடலை பாடும் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது குறித்துதான் இந்தச் சட்டம் பேசுகிறது. காங்கிரஸ் பேசுவது அதன் உள்கட்சி நிகழ்ச்சிகள் குறித்துதான்; அரசு நிகழ்ச்சிகள் குறித்து அல்ல. தேசப்பற்றை ஆறு சரணங்கள் கொண்ட ஒரு சோதனையாக பாஜக மாற்ற முயற்சிக்கிறது. காங்கிரஸ் மீது தவறான தகவல்களைப் பரப்புகிறது. வந்தே மாதரத்திற்கு தேசியப் பாடல் அந்தஸ்தை வழங்கியதும், தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தை வழங்கியதும் காங்கிரஸ் கட்சிதான்” என்று சிங்வி கூறினார். கேரளாவில் அரசு சார்பில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ சுதந்திர தின நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடப்படாதது குறித்து கேட்கப்பட்டபோது, சிங்வி கூறுகையில், “தனிப்பட்ட மாநில அரசுகள் தங்களது முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த முடிவை கட்சித் தலைமை இன்னும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கையாண்டிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் இத்தகைய நிலைப்பாடுகள் இருக்கக்கூடாது என அக்கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவு குறித்து கட்சிக்குள் அதிருப்தி எழுந்துள்ளது.