'அம்மா அப்பாவுக்கு பிறகு குழந்தைகளுக்கு விஜய் மாமா தான்...'- சி.விஜயபாஸ்கர் பேச்சு
தமிழக அரசியல் களம் தற்பொழுது புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மினி மாநாடு போல் பிரம்மாண்டமாக அரங்கேறியுள்ளது. இந்த மேடையில் தவெக நிர்வாகி சி.விஜயபாஸ்கர் மேடையில் பேசுகையில், "இனி எந்தத் தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தான் அமோக வெற்றி பெறும். அதற்குச் சாட்சியாகத்தான் இந்த மேடையும், திரண்டுள்ள மக்கள் கடலும் அமைந்துள்ளது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பிறந்து மூன்று வயதான, பேசக் கூடத் தெரியாத குழந்தை கூட அம்மா, அப்பா என்று அழைத்ததற்கு அடுத்தபடியாக 'விஜய் மாமா' என்றுதான் அழைக்கிறார்கள். 'நான் வர்றேன்' என்ற டயலாக் குழந்தைகள் மனதில் இருக்கிறது. விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் அன்புத் தம்பிகளும், தங்கைகளும் திரளாகக் கூடியுள்ளீர்கள். நமது உழைப்பும், சக்தியும் பன்மடங்காக உயர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் இனி எவராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாறும். மக்கள் மற்றும் நமது கட்சித் தலைவரின் ஈர்ப்புதான் இந்த பிரம்மாண்டக் கூட்டத்திற்குக் காரணம். நமது பாதை நல்ல பாதை, அது நிச்சயம் தவெகவின் வெற்றிப் பாதையாக அமையும்" என்றார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் மினி மாநாடு போல பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக அரசியல் சூழல் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த மேடையில் பேசிய அக்கட்சியின் நிர்வாகி சி.விஜயபாஸ்கர், இனி வரும் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகமே அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டிற்குத் திரண்டு வந்துள்ள மக்களே அதற்குச் சாட்சி என்று குறிப்பிட்ட அவர், அம்மா, அப்பாவிற்குப் பிறகு குழந்தைகளுக்கு விஜய் மாமா தான் என்று புகழாரம் சூட்டினார்.