சேலத்தில் அதிசயம்! கும்பாபிஷேக நன்நாளில் ராஜகணபதி கோயிலை வட்டமிட்ட கருடன்... சிலிர்த்த பக்தர்கள்!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சேலம் மாநகர் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்குமுன் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றது. ஜூன் 16 ஆம் தேதி முதன்முதலாக ராஜகணபதி கோயிலில் 15 அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கடந்த 28ஆம் தேதி முதல் யாக பூஜை தொடங்கப்பட்டு நேற்று இரவு வரை மூன்று கால ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ராஜகணபதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு திருமுறை பாராயணம் பாவனப்பிஷேகம், வெள்ளை சாத்துப்படி நான்கு கால யாக பூஜை மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து 7.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கலசத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தலைமை குருக்கள் தீர்த்த கலசத்தை தலையில் சுமந்தபடி யாகசாலையில் இருந்து ஊர்வலமாக ராஜ கணபதி கோயிலுக்கு வந்தடைந்தனர். பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 8:10 மணிக்கு ராஜகணபதி விமானம் முகப்பு விமானத்திற்கு தீர்த்த கலசத்தில் இருந்து தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கொடிமரம் மூஷிக வாகனன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அப்போது ஏராளமான கருடன் வானத்தில் கோயிலின் கலசம் பகுதியில் வட்டமிட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து மூலவர் ராஜகணபதிக்கு தீர்த்த கலசத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சேலம் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ராஜகணபதி கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது, வானில் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த விழாவிற்காக, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 16-ஆம் தேதி 15 அடி உயரத்திலான புதிய கொடிமரம் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.