“மதிமுகவை சிறுமைப்படுத்துவதா?”.. அமைச்சர் செங்கோட்டையனுக்கு துரை வைகோ பதிலடி!!
Sengottaiyan vs Durai Vaiko: அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் அமைச்சராக உள்ள செங்கோட்டையன், "அதிமுக மதிமுக போலாகிவிடும்" எனப் பேசியதற்கு துரை வைகோ கண்டனம் தெரிவித்தார். இதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், அதிமுகவின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டவே அவ்வாறு பேசியதாகவும், 10 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகி தற்போது தவெகவில் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், அதிமுகவின் நிலை மதிமுகவைப் போல மாறிவிடும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மதிமுகவைச் சிறுமைப்படுத்துவதாகக் கூறி துரை வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள செங்கோட்டையன், அதிமுகவின் பலவீனத்தை வெளிப்படுத்தவே அவ்வாறு பேசியதாகக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.