”அது மருமகளின் வேலை அல்ல”; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கர்நாடக மாநிலம், பெங்களூரில் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் மனைவி (ரூ.5 ஆயிரம்) மற்றும் குழந்தைகளுக்கு (ரூ.4 ஆயிரம்) மாதம் ரூ.9 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கணவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ”மனுதாரரின் மனைவி, தனது மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரை முறையாகக் கவனித்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், வீட்டில் உள்ள வேலைகளையும் அவர் முறையாகச் செய்வதில்லை. அது மட்டுமல்லாமல், கணவரின் அனுமதி இல்லாமல், மனைவி பலமுறை தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனைவியைக் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார். இந்த உத்தரவில், “மனைவி வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் முதன்மையான பொறுப்பு மகன்கள் மற்றும் மகள்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை மருமகள் மற்றும் மருமகனைச் செய்ய வற்புறுத்த முடியாது. அதே நேரத்தில், ஒரு பெண் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்வதற்குக் கணவர் வீட்டில் உள்ள அனைவரது அனுமதியையும் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் என்பது தனிப்பட்ட ஒருவரின் சுதந்திரம் மற்றும் விருப்பத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல. திருமணமான பெண் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்வது அவர்களது அடிப்படை உரிமை. திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது விருப்பம் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு குடும்ப நல நீதிமன்றம், கணவர் தனது மனைவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், குழந்தைகளுக்கு 4 ஆயிரம் ரூபாயும் என மாதம் மொத்தம் 9 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த நபர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில், தனது மனைவியானவர் தனது மாமனார் மற்றும் மாமியாரை முறையாகக் கவனித்துக்கொள்ளவில்லை என்று கணவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதற்குப் பதிலளித்த உயர் நீதிமன்றம், மாமனார் மற்றும் மாமியாரைப் பராமரிப்பது மருமகளின் கடமை அல்ல என்று திட்டவட்டமாகக் கூறியது.