ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டு! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப, ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டுகளை (e-Passports) வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது திறவுகோல் உள்கட்டமைப்பு (PKI) பாதுகாப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜ...

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு ஏற்ப, அடுத்த ஓராண்டுக்குள் மின்னணு கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்காக பொது திறவுகோல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.