PulseNews
அரசியல்

இந்துக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகள்: பாகிஸ்தான்ல இவ்வளவு பேர் இருக்காங்களா? அதிர்ச்சி பட்டியல் ரிலீஸ்

உலகில் அதிக இந்து மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இவற்றுக்கு அடுத்து எந்தெந்த நாடுகளில் இந்துக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்று தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 10 கி.மீ ஆழத்தில் வெடித்த பூமி... 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; 38 உயிர்களை பறித்த பேரழிவு உலகின் அதிக இந்து மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் இந்தியா: 110 கோடி (1.1 Billion) இந்துக்கள் நேபாளம்: 2.86 கோடி (28.6 Million) இந்துக்கள் வங்காளதேசம்: 1.38 கோடி (13.8 Million) இந்துக்கள் இந்தோனேசியா: 42 லட்சம் (4.2 Million) இந்துக்கள் பாகிஸ்தான்: 40 லட்சம் (4 Million) இந்துக்கள் இலங்கை: 31 லட்சம் (3.1 Million) இந்துக்கள் அமெரிக்கா (US): 25 லட்சம் (2.5 Million) இந்துக்கள் மலேசியா: 19 லட்சம் (1.9 Million) இந்துக்கள் பிரிட்டன் (UK): 10 லட்சம் (1 Million) இந்துக்கள் ஐக்கிய அரபு அமீரகம் (UAE): 6.6 லட்சம் (6,60,000) இந்துக்கள் சுவாரசியமான பின்னணி தகவல்கள் இந்தோனேசியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனேசியாவில் 42 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக அங்குள்ள 'பாலி' தீவு அதன் தனித்துவமான இந்து கலாச்சாரத்திற்கு உலக அளவில் புகழ்பெற்றது. பாகிஸ்தான் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்களில் பெரும்பாலோர் 'சிந்து' (Sindh) மாகாணத்திலேயே வசிக்கின்றனர். மலேசியா - பிரிட்டன் மலேசியாவில் வாழும் 19 லட்சம் இந்துக்கள் மற்றும் பிரிட்டனில் வாழும் 10 லட்சம் இந்துக்களில் பெரும்பாலானோர் இந்திய மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். உங்களுக்கு இது தெரியுமா? இந்தியா மற்றும் நேபாளத்தைத் தவிர, இந்து பண்டிகைகளுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கும் சில உலக நாடுகளில் 'மொரிஷியஸ்' முக்கியமானது. தென் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளான கயானா, சுரினாம், மற்றும் டிரினிடாட் - டொபாகோ ஆகிய நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்துக்கள் வாழ்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் சந்ததியினரே இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்துக்கள் அதிகம் வாழும் டாப் 10 நாடுகள்: பாகிஸ்தான்ல இவ்வளவு பேர் இருக்காங்களா? அதிர்ச்சி பட்டியல் ரிலீஸ்
PulseNews சுருக்கம்

உலகில் அதிக இந்து மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கடுத்த நிலையில் உள்ள நாடுகளின் பட்டியல் குறித்த விவரங்களை தற்போது காண்போம்.

இந்த பட்டியலின்படி இந்தியாவில் 110 கோடி இந்துக்களும், நேபாளத்தில் 2.86 கோடி இந்துக்களும் வசித்து வருகின்றனர். உலகின் முதல் பத்து இடங்களில் உள்ள பிற நாடுகள் எவை என்பது குறித்த கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics