PulseNews
அரசியல்

ஏலத்தில் உலக சாதனை-விற்றுத் தீர்ந்த காந்தியின் அரிய வரலாற்று ஆவணங்கள்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது. மும்பையில் உள்ள பிரபல ஏல நிறுவனமான 'சாப்ரன் ஆர்ட்' நடத்திய இந்த ஏலத்தில், காந்தியின் அரிய ஆவணங்களை வாங்குவதற்குப் பலரும் கடுமையான போட்டிப் போட்டனர். மகாத்மா காந்தி தனது நெருங்கிய சகா மற்றும் சீடரான ஆனந்த் ஹிங்கோராணி என்பவருக்குப் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 688 கையெழுத்துக் குறிப்புகள் இந்த ஏலத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன. உண்மை, அகிம்சை மற்றும் சேவை போன்ற உன்னதக் கொள்கைகள் குறித்து மகாத்மா காந்தியால் எழுதப்பட்ட இந்த அரிய குறிப்புகளின் தொகுப்பு, 16 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உலக சாதனைப் படைத்துள்ளது. இந்திய வரலாற்று ஆவணம் ஒன்று ஏல சந்தையில் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல் முறை என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இது தவிர, மகாத்மா காந்தி பயன்படுத்திய பாரம்பரியப் பெட்டி ராட்டை மற்றும் பகவத் கீதை பற்றிய அவரது மிக முக்கியமான கடிதம் ஆகியவையும் இந்த ஏலத்தில் தனித்தனியாக விற்பனைக்கு வந்தன. காந்தியின் பெட்டி ராட்டை ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய்க்கும், புனித நூலான பகவத் கீதை குறித்து அவர் எழுதிய அரிய கடிதம் ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போயின. காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகளையும், இந்திய வரலாற்றின் பக்கங்களையும் தாங்கி நிற்கும் இந்த ஆவணங்கள் அனைத்தும் கோடிகளில் ஏலம் போனது வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஏலத்தில் உலக சாதனை-விற்றுத் தீர்ந்த காந்தியின் அரிய வரலாற்று ஆவணங்கள்
PulseNews சுருக்கம்

மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்தியின் அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளன. 'சாப்ரன் ஆர்ட்' நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், காந்தியின் ஆவணங்களைக் கைப்பற்றப் பலரும் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர்.

காந்தி தனது நெருங்கிய சீடரான ஆனந்த் ஹிங்கோராணி என்பவருக்குப் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 688 கையெழுத்துக் குறிப்புகள் இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த ஆவணங்கள் மிக அதிக விலைக்கு ஏலம் போனதன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics