“மேடையில் பேசுவது எளிது; ஆட்சியை நடத்தும்போதுதான் தெரியும்” - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு!
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ., எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “நாங்களெல்லாம் அமைச்சராக இருக்கும்போதும், கலைஞராக இருந்தபோதும் சரி, முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கெல்லாம் ஒரு பதற்றத்தைக் காலையில் கொடுப்பார்கள். காலையில் ஆறு மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்ட இடத்திற்குப் போக வேண்டும். காலை 6 மணிக்கு, 7 மணிக்கு இல்லாமல் 8 மணிக்கு போன் வந்தால்தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். ஏனென்றால், கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, செய்தித்தாளைப் பார்த்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, அந்தந்த துறையினுடைய அதிகாரிகளுக்குக் காலையில் நேரடியாகப் பேசுவார்கள். முதலமைச்சராக இருந்தபோது, அந்தத் துறை அமைச்சரைத் தொடர்புகொண்டு, ‘இந்த இடத்தில் இந்தப் பிரச்சனை இருக்கிறது’ என்று கேட்பார்கள். கலெக்டர்களுக்கு டென்ஷன் ஆகும். நாங்களும் டென்ஷனில் ஐந்து ஆண்டுக் காலம் இருந்தோம். ஐந்து ஆண்டுக் காலம் டென்ஷனாக நாங்கள் இருந்தோம். மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நாங்கள் டென்ஷனில் இருந்தோம். நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. , நாங்கள் டென்ஷனில் இருந்ததால், அதிகாரிகள் எல்லாம் டென்ஷனாக இருப்பார்கள். அதற்கு அமைச்சர் ஆனந்த், “இன்னைக்கு காலையிலும், நேத்து நைட்டும் சரி, இன்றைக்குக் காலையிலும் சரி, முதலமைச்சர் வந்து, ஒரு சின்ன சின்ன வாய்க்கால் பிரச்சனை கூட போன் அடித்தால், ‘அதை உடனே சரி செய்தாச்சா?’ என்று கேட்கக்கூடிய ஒரு முதலமைச்சராகத்தான் இருக்கிறார். நீங்கள் ஐந்து வருடம் டென்ஷன் ஆக இருந்தீர்கள். நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம். எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதற்கு முதல்வர் விஜய், சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் உள்ளிட்ட பலரும் சிரித்தனர். இதனைத் தொடர்ந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகத்தான் இருக்கிறார். அவர் பிஸியாக இருக்கிறார். ஏனென்றால் எல்லா கட்சி தொண்டர்களையும் பார்த்துப் பார்த்து, புதிதாக வந்த இயக்கம். நாங்கள் 1996-ல் அமைச்சராகும்போது எங்களைப் போலத்தான் இளைஞர்களும் வந்து வந்து எங்களைக் கேட்பார்கள். இனிமேல்தான் உங்களுக்குத் தெரியப்போகிறது பாருங்கள். மேடையில் நிற்கும்போது, பேசும்போது பேசுவது எளிது. ஆட்சியை நடத்தும்போதுதான் தெரியும் கஷ்டங்கள். இன்னும் கொஞ்சம், மூன்று மாதம்தான் ஆகியிருக்கிறது. இப்போது பாருங்கள். விவசாயிகள் போராட்டம் இல்லாமலேயே ஐந்து ஆண்டுக் காலம் வாழ்ந்தார்கள்” எனத் தெரிவத்தார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலைஞர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் தாங்கள் அமைச்சர்களாக இருந்தபோது, மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க தினமும் அதிகாலை முதலே பதற்றத்துடன் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். எதிர்க்கட்சியினர் ஆட்சியில் ரிலாக்ஸாக இருப்பதாகவும், ஆனால் தாங்கள் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் அதிகாரிகளை விழிப்போடு வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சிறு பிரச்சனைகளைக்கூட உடனுக்குடன் சரிபார்க்கும் முனைப்பில் இருப்பதாகக் கூறினார்.
மேலும், மேடைகளில் பேசுவது எளிது என்றும், ஆட்சியை வழிநடத்தும்போதுதான் அதன் சிரமங்கள் தெரியும் என்றும் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார். புதிய கட்சியான இதில் இன்னும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், வரும் காலங்களில் சவால்கள் புரியும் என்று அவர் தெரிவித்தார். இந்த உரையாடலின்போது முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் ஆகியோர் சிரித்தனர்.