PulseNews
அரசியல்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஜெயலலிதா. இவரது விசுவாசியாக கருதப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், இவர் திமுக-வில் இணைந்த சம்பவம் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் ராஜ்யசபா எம்பி ரபி பெரனார்ட் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

விஜயகாந்த்:

நான் போயஸ் கார்டன் போயிருந்தேன். அப்போது ஷீலா ப்ரியா, ராமமோகன் அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பேசும்போது நான் கவனித்தேன். அம்மா (ஜெயலலிதா) இதனால் மிகவும் மனம் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் விஜயகாந்த் நாக்கைத் துருத்தி பேசியது அவர்களை ( ஜெயலலிதா) மிகவும் பாதித்தது. நாம் இத்தனை வருடம் முதலமைச்சராக இருந்தவர், ஒரு பெண் நாக்கைத் துருத்தி பேசுகிறாரே? என்று நினைத்துவிட்டார்.

அதற்கு 2 வாரங்களுக்கு முன்பு தாஜ் ஹோட்டலில் நடந்த விருந்தில் பக்கத்திலே அமர்ந்து பேசி சாபிட்டார்கள். சோ, விஜயகாந்த், ஜெயலலிதா அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். இப்படி நடந்துவிட்டது என்று தனிப்பட்ட முறையில் காயம் அடைந்துவிட்டார்.

சகோதரன் போல கருதினார்:

சோ ஆட்சி மாற்றம் வந்தாக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால், இவங்க ( ஜெயலலிதா) அதை உறுதியாக நம்பினார்கள். கட்டம் இருக்கிறது என்று நம்பினார்கள். கூட இருப்பவர்கள் செயல்படும் விதமும் இருக்கிறது. தூதர்கள் 4, 5 பேர் இருந்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் எல்லாரும் இருந்தார்கள். அது அப்படி நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா மிகவும் மதித்தார்கள். முதலமைச்சர் பதவியை ஒரு முறை அல்ல 2 முறை கொடுத்து திருப்பிக் கொடுப்பது என்பது பெரிய விஷயம். இப்படி ஒரு விசுவாசியாக இருக்கிறார் என்று ஒரு சகோதரர் மீது கொண்ட பரிவைப் போல அவர் மீது அன்பு வைத்திருந்தார். அவரும் அப்படி நடந்து கொண்டார்.

விசுவாசிகள்:

ஓ.பன்னீர்செல்வம் அம்மாவால் ( ஜெயலலிதா) நல்ல மனிதர். அதிமுக-வில் அனைவரும் அவரது விசுவாசிகள். எடப்பாடி பழனிசாமியும் அப்படித்தான். ஜெயலலிதாவின் மரணம் அருமையான கனவு கலைந்தது போல இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக-வில் ஓபிஎஸ்:

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது தனது முதலமைச்சர் பதவியை அவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்துச் சென்றார். அவரும் ஜெயலலிதா சிறையில் இருந்து திரும்பி வரவும் அந்த பதவியை அவரிடம் மீண்டும் ஒப்படைத்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மீது அதிமுக தொண்டர்களுக்கும் தனி மரியாதை இருந்தது.

ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலுக்கு பிறகு தற்போது திமுக-வில் இணைந்துவிட்டார். திமுக-வின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தற்போது உள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
PulseNews சுருக்கம்

ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவில் இணைந்தது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் அதிமுக எம்பி ரபி பெரனார்ட் அளித்த பேட்டியில், ஓ.பன்னீர்செல்வத்தை தனது சகோதரரைப் போலவே ஜெயலலிதா நேசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சிறை சென்றபோது தனது முதலமைச்சர் பதவியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் திரும்பியதும் மீண்டும் பெற்றுக்கொண்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டிய அவர், ஓபிஎஸ் மீது ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டசபையில் விஜயகாந்த் நாக்கைத் துருத்தி பேசியது ஜெயலலிதாவிற்கு மிகுந்த மனவேதனையை அளித்தது என்றும், அதற்கு முன்பாக ஒரு விருந்தில் அவர்கள் இருவரும் சுமூகமாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமியுடனான மோதலுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவின் மரணம் ஒரு கனவு கலைந்தது போன்ற உணர்வைத் தந்ததாகக் குறிப்பிட்ட ரபி பெரனார்ட், அன்றைய காலகட்டத்தில் அதிமுகவில் இருந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் விசுவாசிகளாகவே இருந்தனர் என்றும் கூறியுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics