Madurai Hc ; அமைதியான போராட்டம் குற்றமல்ல: மாணவர் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

மாணவர்கள் தங்களது போராட்டத்தை அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் நடத்தியுள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில், குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே அமையும். என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

சனாதானா ஒழிப்பு கூட்டம்

மதுரை செந்தூர்வேலன் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் தனியார் மண்டபத்தில் சனாதானா ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது. இதை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவரான நான் உள்பட ஏழு பேர், மண்டபத்தின் எதிரே ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தல்லாகுளம் போலீசார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

ஜனநாயக முறையில் எழுப்பியுள்ளனர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ஒரு சட்ட மாணவர் என்பதால், அத்தகைய கூட்டம் நடத்துவதற்குத் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். மேலும் அவர்கள் மாநாட்டு மண்டபத்தின் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஒரு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மனுதாரரும் மற்றவர்களும், சனாதன தர்மத்தை ஒழிப்பதற்காக ஒரு கூட்டம் நடத்தப்பட்ட மாநாட்டு மண்டபத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். மனுதாரரும் மற்றவர்களும் தங்களது போராட்டத்தை அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் எழுப்பியுள்ளனர்.

தல்லாகுளம் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை

மேலும், எந்தவொரு பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்பட்டதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இத்தகைய சூழ்நிலைகளில், குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே அமையும். மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் மனுதாரரைப் போன்றே அதே நிலையில் உள்ளனர். ஏழு மாணவர்கள் மீது தல்லாகுளம் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சனாதன ஒழிப்பு கூட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர் மற்றும் மற்றவர்கள் மீதான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. போராட்டம் அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் அமைந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பது சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மதுரையில் நடைபெற்ற கூட்டத்திற்கு எதிராக செந்தூர்வேலன் உள்ளிட்ட மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.