PulseNews
அரசியல்

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம்: திருச்சியில் திரண்டு உற்சாக வரவேற்பளித்த தி.மு.க நிர்வாகிகள்

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாகக் கூடி சால்வை மற்றும் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றார். தஞ்சையைச் சென்றடைந்த அவருக்கு அங்கும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் பல்வேறு முக்கியக் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதை முன்னிட்டு, தஞ்சை பொறுப்பு திமுக நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். செய்தி: க.சண்முகவடிவேல்

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உதயநிதி சுற்றுப்பயணம்: திருச்சியில் திரண்டு உற்சாக வரவேற்பளித்த தி.மு.க நிர்வாகிகள்
PulseNews சுருக்கம்

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் திரளாகக் கூடி உற்சாக வரவேற்பளித்தனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics