S-400 ஏவுகணைகளைக் கண்டுபிடிக்க Sleeper Cells -ஐ அனுப்பிய பாகிஸ்தான்; ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் பகீர் தகவல்..!
கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஆபரேஷன் சிாந்தூர்' (Op Sindoor) நடவடிக்கையின் போது, இந்திய எல்லையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிற்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் வராமல் தடுத்து நிறுத்துவதில் 'S-400' வான் பாதுகாப்பு அமைப்பு மிக முக்கியப் பங்காற்றியதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள் உதவியுடன் S-400 ஏவுகணைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களைக் பாகிஸ்தான், கண்டுபிடிக்க முயற்சித்தது என்றும், இதற்காக இந்தியாவில் உள்ள தனது உளவு அமைப்புகள் மற்றும் 'ஸ்லீப்பர் செல்'களை (Sleeper Cells) பாகிஸ்தான் தீவிரமாகப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்தியாவால் 'சுதர்சன சக்கரம்' என்று அழைக்கப்படும் S-400, ரஷ்ய தயாரிப்பாக்கும். இது உலகின் அதிநவீன நீண்டதூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். 'ஆபரேஷன் சிாந்தூர்' நேரத்தில் பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. மேலும், ஆதம்பூர் விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றதற்கு, அங்கு S-400 அமைப்புகள் வைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் தவறாகக் கணித்ததே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 'பிரமோஸ்' (BrahMos) ஏவுகணையின் ஆற்றலையும் மிஸ்ரா சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அதாவது, பிரமோஸ் ஏவுகணை 14 முதல் 15 கிலோமீட்டர் உயரம் வரை சென்று, பின்னர் 'மேக் 3' (Mach 3) என்ற அதிவேகத்தில் கீழ்நோக்கிப் பாய்வதால், அதனை வான்வெளியில் இடைமறித்து அழிப்பது இயலாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பல உலக நாடுகள் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய எல்லையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிற்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைவதைத் தடுப்பதில் 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியப் பங்காற்றியதாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது இந்த பாதுகாப்பு அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த எஸ்-400 ஏவுகணைகள் நிறுத்தப்பட்ட இடங்களைக் கண்டறிய பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள் உதவியுடனும், இந்தியாவில் உள்ள தங்களின் உளவு அமைப்புகள் மற்றும் ஸ்லீப்பர் செல்கள் மூலமும் அந்த இடங்களைக் கண்டறிய பாகிஸ்தான் திட்டமிட்டிருந்ததாக அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.