PulseNews
அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலிடம்; முதல்வர் விஜய் அதிரடி முடிவு!

தமிழக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பதவியேற்பு விழாவில் கூட அதே போல் பாடப்பட்டது. சமீபத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இப்படியாக தமிழக துணை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்ற்கும் நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நாளை (10-08-26) கொண்டு வருகிறார். அதன்படி கல்வி நிறுவனம், அரசு அலுவலகம் என அனைத்தி பொதுத்துறை நிறுவனம் நிறுவனங்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வருகிறார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலிடம்; முதல்வர் விஜய் அதிரடி முடிவு!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படாமல், மூன்றாவதாகப் பாடப்படுவது தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே முதலில் பாட வேண்டும் என்பதை கட்டாயமாக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக, இது தொடர்பான தனித் தீர்மானத்தை நாளை (10-08-26) சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்கிறார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics