மேட்டூர் அணையை திறந்து வைத்து காவிரி அன்னையை வணங்கிய முதல்வர் விஜய் - கல்லணைக்கு எப்போது செல்லும்?

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்து, காவிரி அன்னைக்கு மலர்களை தூவி வணங்கினார்.

காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து 92-வது ஆண்டாக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் வாயிலாக 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர்.

காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் அணை ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 17 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும்.பாசனப் பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் பாசனத் தேவை குறையும்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்கு முழுமையாக நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் அணையில் போதுமான நீர்இருப்பு இல்லாத காரணத்தால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.

கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்து நிரம்பியது. பின்னர், கபினி, கேஆர்எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் 45 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்தும், குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசன தேவைகளை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கை ஏற்று அணை திறக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதல் முறையாக அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 கண் மதகுகளை மின் விசையால் இயக்கி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை அவர் விடுவித்தார். பின்னர் காவிரி அன்னைக்கு மலர்களைத் தூவி அவர் வணங்கினார். இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 200 கிலோமீட்டர் பயணித்து மூன்றரை நாட்களில் கல்லணையைச் சென்றடையும். அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைமின் நிலையம், சுரங்க மின்நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வாயிலாக 460 மெகாவாட் மின்சார உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

டெல்டா பகுதி பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர் காவிரி அன்னைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
காவிரி டெல்டா பாசனத்தின் ஆதாரமாகத் திகழும் இந்த அணையில் இருந்து 92-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.