PulseNews
அரசியல்

துணைப் பேராசிரியர்கள் பதவி உயர் தொடர்பான புதுச்சேரி அரசு அரசாணைக்கு எதிர்ப்பு; தமிழ் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் பணிபுரியும் கல்லூரி துணைப் பேராசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரணாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அரசாணை சட்டத்துக்குப் புறம்பானதாகும். இதை உடனே புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என தமிழ் உரிமை இயக்கம் தலைவர் பாவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் அடியோடு சீரழிக்கும் என்.ஆர்.காங்கிரசு - பா.ச.க கூட்டணி அரசைக் கண்டித்து தமிழ் உரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதுச்சேரி அண்ணாசிலை அருகில், நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் கல்லூரிகளில் பணிபுரியும் துணைப் போராசிரியர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்படாத பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகள் வழங்கப்படாததால், ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி வாய்ப்புகள் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன. எனவே, துணைப் பேராசிரியர்களுக்கு உடனடியாகப் பதவி உயர்வு வழங்கி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி வாய்ப்புகளை உடனே வழங்க வேண்டும். கல்லூரி துணைப் பேராசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரணாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அரசாணை சட்டத்துக்குப் புறம்பானதாகும். எனவே, சட்டத்துக்குப் புறம்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனே திரும்பப் பெற வேண்டும் குலக்கல்வி முறையைத் திணிக்கும் இந்திய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை உடனே கைவிட வேண்டும். புதுச்சேரி பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிடும் மத்திய இடைநிலை கல்வி வாரியப் (CBSC) பாடத்திட்டத்தைக் உடனடியாக கைவிட வேண்டும். அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்று மொழி ஆக்க வேண்டும். புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் உருவாக்கிடு! அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் தலைமை தமிழ் உரிமை இயக்கம் தலைவர் பாவாணன் தலைமை தாங்கினார். பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
துணைப் பேராசிரியர்கள் பதவி உயர் தொடர்பான புதுச்சேரி அரசு அரசாணைக்கு எதிர்ப்பு; தமிழ் உரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்
PulseNews சுருக்கம்

புதுச்சேரியில் கல்லூரி துணைப் பேராசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரணானது என்று கூறி தமிழ் உரிமை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இதை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன் தலைமையில் இதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் சீரழிப்பதாகக் குற்றம் சாட்டி, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics