முன்பு கரப்பான் பூச்சி; இப்போது ’திமாகி நக்சல்’?
டெல்லியில் கடந்த சனிக்கிழமை (15-08-26) அன்று சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ’திமாகி நக்சல்’ மன நிலை குறித்துப் பேசி இருந்தார். அவர் பேசுகையில், காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சலித்தை ஒழிப்பதில் நாடு வெற்றி பெற்றுவிட்டதாகவும், ஆனால், அதன் கருத்தியல் ஆதரவாளர்கள் வன்முறையையும் குழப்பத்தையும் பரப்ப வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இதற்குப் பதிலடி தரும் வகையில், தான் ஒரு திமாகி நக்சல் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதே போல எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களை திமாகி நக்கல்கள் என்று தெரிவித்திருந்தனர். இதனிடையே, எக்ஸ் தளத்தில் ’திமாகி நக்சல் ஜனதா கட்சி’ என்ற புதிய சமூக வலைத்தள கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தைப் பல ஆயிரக்கணக்கணக்கானோர் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இப்போது இந்த கணக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 13 முக்கிய கணக்குகளைப் பின்தொடர்கிறது. மேலும், பிரகாஷ்ராஜ் தனது பக்கத்தில் ’முட்டாளாக இருக்காதீர்கள், கேள்வி கேளுங்கள், அடிமைத்தனத்தை ஏற்காதீர்கள்’ என்று பதிவிட்டிருந்த கருத்தையும் இந்த கணக்கு மறு பதிவு செய்திருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ”பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி தலைவர்களை திமாகி நக்சல் என்று கூறவில்லை. மாவோயிஸ்ட்டுகள், பிரிவினைவாதிகளை ஆதரிப்பவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நிராகரிப்பவர்கள், பிரிவு 370 க்கு ஆதரவாக நிற்பவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையே அவர் அப்படிக் குறிப்பிட்டார்” என்று விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேலையற்ற இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அது நாடு தழுவிய அளவில் கவனம்பெற்றது. இந்நிலையில், திமாகி நக்சல் என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் உருவாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஆயுதம் ஏந்திய நக்சலிசத்தை ஒழிப்பதில் நாடு வெற்றி பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வன்முறையைத் தூண்டும் 'திமாகி நக்சல்' எனும் புதிய கருத்தியல் ஆபத்து குறித்து எச்சரித்தார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிலடி மூலம் பிரதமரின் அந்த விவாதத்திற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.