ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசினாரா தவெக எம்எல்ஏ? - அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு
“திமுக ஆட்சியில் கலைஞர் பெயரை சூட்டுவதற்காகவே ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டினர். ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கல்ல, உணர்வு சம்பந்தப்பட்டது. அத்தகைய உணர்வுப்பூர்வமான விளையாட்டை ஸ்டேடியம் கட்டி ஜல்லிக்கட்டு நடத்தி திமுக இளைஞர்களை தவறாக வழிநடத்தியது என்றே சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவையில் கூறினார். அதற்குள் மைக் ஆஃப் ஆகிவிட்டது” என்று அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவையில் பேசியது தவறாகச் சித்தரிக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டியது உணர்வுப்பூர்வமான விளையாட்டை பொழுதுபோக்காக மாற்றி இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் செயல் என அவர் குறிப்பிட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அவர் அவ்வாறு பேசி முடிப்பதற்குள் மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவே அவர் அவ்வாறு பேசியதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.