PulseNews
அரசியல்

ஜி ஸ்கொயர் பற்றி எஸ்.பி வேலுமணி பேசினால் தி.மு.க-வுக்கு என்ன பிரச்னை? சட்ட சபையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோவையில் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு திமுக உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒரு தனியார் நிறுவனம் குறித்து வேலுமணி புகார் கூறும்போது அதற்காக தி.மு.க-வினர் ஏன் எழுந்து குரல் கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை (24.08.2026) காலை சட்டப்பேரவை தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.பி. வேலுமணி பேசினார். இது தொடர்பாக எஸ்.பி. வேலுமணி பேசுகையில், “கோவையில் ஜி ஸ்கொயர்” என்ற நிறுவனம் ஆயிரம் ஏக்கரில் சைட் போட்டிருக்கிறார்கள். பெரிய பெரிய பாறைகளை எல்லாம் உடைத்து எடுத்திருக்கிறார்கள். அதேபோல, வனவிலங்குகள் சிறுத்தைபுலி, மான்களெல்லாம் கொல்லப்பட்டு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள். இதற்கு கண்டிப்பாக ஒரு விசாரணை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரணமாக விவசாயிகள்மீது வழக்கு போடுகிறார்கள். ஆனால், ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு எல்லாமே கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாமே நடந்ததுதான்” என்று பேசினார். இதற்கு, சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஜி ஸ்கொயர் என்ற நிறுவனத்தின் மீது ஒரு புகாரைச் சொல்கிறார். அதற்கு ஏன் தி.மு.க எழுந்து குரல் கொடுக்கிறது என்பது தெரியவில்லை.” என்று பேசினார். இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், தி.மு.க உறுப்பினர்கள் அமைதி அடைந்தனர்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஜி ஸ்கொயர் பற்றி எஸ்.பி வேலுமணி பேசினால் தி.மு.க-வுக்கு என்ன பிரச்னை? சட்ட சபையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோயம்புத்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனம் விதிகளை மீறி செயல்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி குற்றம் சாட்டினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒரு தனியார் நிறுவனம் குறித்து வேலுமணி புகார் கூறும்போது, அதற்காக திமுகவினர் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அமைச்சரின் இந்த கருத்து பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics