PulseNews
அரசியல்

தமிழ்நாட்டின் அடையாளங்களை மறைக்க முயற்சிக்கக்கூடாது...! -அமீர் பரபரப்பு பதிவு...!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ள இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதியின் வரலாறு தொடர்பான பகுதியில், முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாத விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து தனது கருத்துகளை பதிவு செய்து வரும் இயக்குநர் அமீர், வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகநீதிக்கான போராட்டங்களையும், இடஒதுக்கீட்டுக்கான வரலாற்றுப் பயணத்தையும் விளக்கும் பகுதியில் முக்கியத் தலைவர்களின் பங்களிப்பு தவிர்க்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றோடு பின்னிப் பிணைந்த அடையாளங்கள். சமத்துவம், சுயமரியாதை, உரிமை மற்றும் சமூகநீதிக்காக அவர்கள் முன்னெடுத்த சிந்தனைகளும் போராட்டங்களும் தமிழ்நாட்டின் வரலாற்றில் அழியாத தடத்தை பதித்துள்ளன. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களின் பெயர்களை மறைக்கவோ, புறக்கணிக்கவோ அல்லது அவர்களின் பங்களிப்பை பின்னுக்குத் தள்ளவோ எந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.வரலாற்றை மாற்றி எழுத முடியாது. சமூகநீதிக்காக பாடுபட்ட தலைவர்களின் பங்களிப்பை முழுமையாகப் பதிவு செய்து, உண்மையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் அடையாளங்களை மறைக்க முயற்சிக்கக்கூடாது...! -அமீர் பரபரப்பு பதிவு...!
PulseNews சுருக்கம்

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்த வரலாற்றில் முக்கிய தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுப் பதிவில் தலைவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டதற்கு இயக்குநர் அமீர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சமூகநீதி மற்றும் சமத்துவம் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமீர், தமிழ்நாட்டின் அடையாளங்களை மறைக்க முயற்சிப்பதாகச் சாடியுள்ளார். இடஒதுக்கீட்டுப் போராட்டங்களின் வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களைப் புறக்கணிக்கும் செயலுக்கு அவர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics